சூலூர்பேட்டை மற்றும் தடா இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமையான இன்று 5 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளுக்காக புற நகர் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டும், நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே கூடுதல் பேருந்துகள் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தசூழலில் இன்று சென்னை ரயில் பயணிகளை பாதிக்கக்கூடிய மற்றொரு அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில், சூலூர்பேட்டை மற்றும் தடா ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை சூலூர்பேட்டை, ஆவடி செல்லும் ரயில்கள் உட்பட 5 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும் நான்கு ரயில்கள் எளாவூர் - சூலூர்பேட்டைஇடையே ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூலூர்பேட்டையில் இருந்து புறப்படவேண்டிய நான்கு ரயில்கள் சூலூர்பேட்டை - எளாவூர் இடையே ரத்துசெய்யப்பட்டு, எளாவூரில் இருந்து இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வேஅறிவித்துள்ளது.