26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில், மும்முறை தாண்டும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற் தமிழக வீரர் பிரவின் சித்ரவேல் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று அசததியுள்ளார். அதேபோல் 20 கிலோ மீட்டர் தூர நடை போட்டியில் தமிழக வீரர் செர்வின் சபாஸ்டியன், வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள தமிழக வீரர்களான பிரவின் சித்ரவேல் மற்றும் செர்வின் சபாஸ்டியன் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "சிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள பிரவீன் சித்திரவேல், இளம் தலைமுறையினருக்கு சிறந்த உதாரணமாக விளங்கி பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் பிரவின் சித்ரவேல் மற்றும் 20 கிலோ மீட்டர் நடையோட்டம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் செர்வின் சபாஸ்டியன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகளவில் நடைபெறும் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.