ரயில்வே பயணச்சீட்டு முகநூல்
தமிழ்நாடு

ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு: தரகர்கள் தலையீட்டை தடுக்க தெற்கு ரயில்வே புதிய முயற்சி!

ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவில் தரகர்கள் தலையீட்டை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

PT WEB

பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு பயண சீட்டுகள் விரைவாக விற்று தீர்ந்து விடுகின்றன. தரகர்கள் இடையில் புகுவதுதான் இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இதை தடுக்க ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக கணினியை பயன்படுத்தி அதிக அளவில் பயணச்சீட்டு பதிவு செய்பவர்களையும் கண்காணிப்பு வளையத்தில் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரகர்கள் தலையீடு தடுக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

முக அடையாளம், கைரேகை சரிபார்த்தல், தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்ய கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற ரயில்வே பாதுகாப்பு படை ஆலோசித்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.