தமிழ்நாடு

விமானத்தில் முழக்கம் - சோபியாவுக்கு ஜாமீன்

விமானத்தில் முழக்கம் - சோபியாவுக்கு ஜாமீன்

webteam

பாஜகவிற்கு எதிராக விமானத்தில் முழக்கமிட்ட சோபியா பெலிக்ஸுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டது.

விமானப் பயணத்தின்போது பாஜகவுக்கு எதிராக அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை முன்பு சோபியா பெலிக்ஸ் என்ற பெண் முழக்கங்களை எழுப்பினார். இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட சோபியாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். தமிழிசை உள்ளிட்ட 10 பேர் மீது சோபியா குடும்பத்தினர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோபியா தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்று தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சோபியாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.