அண்ணாமலை pt
தமிழ்நாடு

தொகுதியில் அதிருப்தி.. தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை? டெல்லிக்கு அவசர கடிதம்!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Prakash J

தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே அதிருப்தி நிலவுவதாக அண்ணாமலை தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் நடைபெறும் ஐந்து மாநில தேர்தல்களில், தமிழ்நாட்டுக் களமும் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. அந்த வகையில் அதிமுகவில், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில், அதற்கான இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மைலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி, திருப்பூர், கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்க்ஜு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவன்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் ஆகிய இடங்கள் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அண்ணாமலை

இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே அதிருப்தி நிலவுவதாக அண்ணாமலை தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இந்தியா டுடே ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையில், பாஜக எளிதில் வெற்றிபெற சாதகமாகக் கருதப்படும் கிணத்துக்கடவு உள்ளிட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்காதது குறித்து டெல்லியில் உள்ள மத்திய தலைமைக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார் எனவும், இது, பாஜகவுக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும், தவிர, தாம் தமிழகத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் தலைமைக்குத் தெரிவித்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, பாஜக வளர்ந்து வரும் தொகுதிகளை ஒதுக்காமல் வேறு தொகுதிகளை ஒதுக்கியுள்ளதால் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அவர் கட்சி மேலிடத்திடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிருப்தி கட்சித் தொண்டர்களிடமும் பரவியுள்ளது. இதுதொடர்பாக, அவர்கள் மாநிலத் தலைமையிடம் தங்களது குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.