Annamalai
Annamalai pt desk
தமிழ்நாடு

“2ஜி வழக்கில் என்ன நடந்து? 9 டேப்கள் வெளியிடப்படும் அதை திமுக மறுக்கட்டும்” - அண்ணாமலை

webteam

செய்தியாளர்: ஐஸ்வர்யா

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை முக்கிய தலைவர்கள் ஒன்றாக சந்தித்து பேசுவோம். அது போலத்தான் கோவையில் இன்று கூட்டம் நடைபெற்றது.

PM Modi

திமுக பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் வேலை பார்த்த பெண், ஊடகங்களிடம் பேசி இருக்கின்றார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த அவர், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டுள்ளார். 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொல்லிவிட்டு ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்தாக குற்றசாட்டியுள்ளார். இது தொடர்பக இன்னும் வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. இதை பா.ஜ.க சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படும். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் துவக்கி வைக்கின்றார். ஓரே மாதத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் தமிழகம் வருகிறார். பிரதமர் அயோத்தி செல்வதற்காக 11 நாள் சிறப்பு விரதம் இருக்கின்றார். ராமர் தொடர்புடைய இடங்களுக்கு பிரதமர் நேரில் சென்று கொண்டிருக்கிறார். இங்கு ராமர் தொடர்புடைய ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு செல்கின்றார். ராமர் அனைவருக்கும் பொதுவானவர், மக்கள் இதை பெரிய அளவில் வரவேற்கின்றனர்,

தமிழகத்திலிருந்து முக்கியமான நபர்கள் அயோத்தியா செல்கின்றனர். விழாவிற்கு பின்னர் சில தினங்கள் கழித்து நாங்களும் செல்ல இருக்கின்றோம். அயோத்தி ராமர் கோவில் குறித்து பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. அமைச்சர் சேகர்பாபு முதல்வருக்கு இராமாயணம் புத்தகம் கொடுக்கிறார். படிப்பது ராமயாணம். இடிப்பது கோவில்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின் கோவில்களை இடித்தனர். பெரிய எதிர்ப்பு வந்த பின் இடிப்பதை நிறுத்தி வைத்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர், நீதிமன்ற அனுமதியோடு ராமர்கோவில் கட்டப்படுகின்றது. உதயநிதி ஸ்டாலின் வரலாற்றை தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

Governor RN Ravi

தமிழக ஆளுநர் பெருமாள் கோவிலை சுத்தப்படுத்தி மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார். மாநில அரசு சொல்வதை அவர் கேட்டு நடக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆளுநர் வரம்பு மீறியதாக நீதிமன்றம் சொல்லவில்லை” என்றார்.

தொடர்ந்து, ‘திமுக பைல் மாதிரி அதிமுக பைல் எப்போது வெளியாகும்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “2-ஜி தொடர்பாக மொத்தம் ஒன்பது பைல்கள் வெளியான பின்பு மீடியா முன்னர் தெரியபடுத்துகின்றோம். 2ஜி வழக்கில் என்ன நடந்து இருக்கின்றது என்ற டேப் வெளியிட்டு இருக்கின்றோம். 9 டேப்களும் வெளியான பின்பு விரிவாக மீடியாவிடம் பேசுகின்றோம்.

திமுக இந்த டேப்பிற்கு பதில் சொல்ல வேண்டும். முதல்வரின் தனிப்பட்ட உதவியாளரும் இந்த டேப்பில் பேசி இருக்கின்றனர். ஓவ்வொரு விடயத்தையும் எப்படி கையாண்டு இருக்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும். திமுக இந்த டேப் பொய் என சொல்லட்டும் பார்க்கலாம். நடைபயணத்தின் போது மாநில அரசு மீதுதான் பெரும்பாலும் குற்றச்சாட்டு சொல்லி இருக்கின்றனர். 83 சதவீதம் மாநில அரசு தொடர்பாகவும், 17 சதவீதம் மத்திய அரசு தொடர்பாகவும் மனு வந்துள்ளது” என்றார்.

2G

தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “அண்ணாமலைக்கு முதல்வர் கனவே இல்லை. அவர்கள் (அதிமுக) கட்சியை போல எங்கள் கட்சியில் ஒரு தலைவரை தூக்கிப் பிடித்து இவர்தான் என காட்ட மாட்டோம். கட்சியை வளர்ப்பது, நிறைய தலைவர்களை உருவாக்குவது, மூத்தவர்களுடன் இணைந்து கட்சியை வளர்ப்பது மட்டுமே எனக்கு கொடுக்கப்பட்ட பணி. முதல்வர் கனவில் நான் இல்லை. துக்ளக் விழாவில் நான் பங்கேற்ற போது துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முதல்வர் பதவி குறித்த அவர் கருத்தை சொல்கிறார். சில கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும், பதவி ஆசை இருக்கும் அவர்கள் பா.ஜ.கவை குற்றம் சுமத்த எந்த அருகதையும் இல்லாதவர்கள்.

Jayakumar

பா.ஜ.கவில் முதல்வராக என்னை விட முழு தகுதி இருக்க கூடிய நபர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கின்றனர் அந்த கட்சியில் (அதிமுக) அப்படி சொல்ல முடியுமா? நான் சவால் விடுகிறேன். இவரை தவிர முதல்வர் நாற்காலிக்கு பொறுத்தமானவர் என அந்த கட்சியினரால் யாரையாவது சொல்ல முடியுமா?;. பாஜகவில் நிறைய தலைவர்கள் இருக்கின்றனர். பா.ஜ.கவில் சிங்கிள் லீடர் என்பதற்கு இடமே இல்லை. அந்தக் கட்சியில் ஒரு தலைவரை தவிர முதல்வர் நாற்காலியில அமர தகுதியானவர் யாரும் இல்லையா?. மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன், ஒரு கோடி தொண்டர்களை கொண்ட கட்சி என்று சொல்கின்றீர்களே, முதல்வர் பதவிக்கு ஒரு வேட்பாளர்தானா? புரியாதவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

பா.ஜ.கவில் இயற்கையாக உருவான தலைவர்கள் இருக்கின்றனர். அதற்கு காரணம் சித்தாந்தம். எங்களை பொறுத்த வரை நாங்கள் செயற்கையாக உருவாக்கபட்டவர்கள் இல்லை. யாரை எங்கு முன்னிலை படுத்த வேண்டும் என்பது எங்கள் தலைமை முடிவு செய்கிறது. இது திமுகவிற்கோ, மற்ற கட்சிகளுக்கோ புரியாது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரை மிகப்பெரிய எழுற்சிக்கு தமிழகம் தயாராகிக் கொண்டு இருக்கின்றது. 2024ல் பிரதமராக மோடி நிச்சயம் வருவார்

பாஜக வெற்றி

. வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது தெரியும் நாங்கள் சொல்வது உண்மை என்பது. இன்னும் தேர்தல் அறிவிக்கவில்லை. தேர்தல் கூட்டணி பார்லிமென்டரி குழு பார்த்து கொள்வார்கள். திமுகவின் 32 மாத ஆட்சியில் என்ன செய்தனர் என்பதை மக்களிடம் அவர்களால் சொல்ல முடியவில்லை.

1950-ல் இருந்து மாநில உரிமையை தவிர வேறு எதாவது திமுக பேசி இருக்கின்றதா? திமுக மாநில உரிமையை மீட்டெடுப்பது என்பது வெறும் வாய்சொல் மட்டுமே” என தெரிவித்தார்.