அன்பில் மகேஸ் பொய்யாமொழி pt web
தமிழ்நாடு

”ஒரு கல்லை கடவுளாக மாற்ற..” | வைரலான வீடியோ.. விமர்சனங்களுக்கு அன்பில் மகேஷ் சொன்ன பதில்!

ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு தன்னை மனிதனாக்க மறந்து விட்டான் என கரூரில் தான் அழுதது குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

PT WEB

கரூர் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுதும் அதிச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கரூர் உயிரிழப்பு சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களும் சம்பவம் நடந்த அன்றிரவே, கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது, அங்கிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து கதறி அழுத வீடியோ சமூக ஊடகங்களில் பகிர்ந்து ட்ரோல் செய்துவருகின்றனர். மேலும், இந்த வீடியோவை சுட்டிக்காட்டி எதிர்கட்சிகளும் அன்பில் மகேஸை எதிர்மறையாக விமர்சித்திருந்தனர்.

தமிழ் முழக்கம் மேடைப்பேச்சு நிகழ்ச்சியில் செய்தியாளர் சந்திப்பு

இந்தநிலையில் தான், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் "தமிழ் முழக்கம் மேடைப்பேச்சு - ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்க தொடக்க விழா இன்று நடைபெற்றது. அக்டோபர் 22 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் பன்னாட்டு பயிலரங்க தொடக்க விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அளித்தார். அப்போது,

“கரூரில் நீங்கள் அழுத வீடியோ காட்சிகளுக்கு தமிழக வெற்றிக்கழகத்தினர் மற்றுன் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து பேசுவது” குறித்த கேள்விக்கு..

அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்து பேசுகையில் "உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும், இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம், உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமமானது, அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்று இருந்தால் மரத்திற்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார், முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு தன்னை மனிதனாக்க மறந்து விட்டான்” என கூறினார்.

அன்பில் மகேஷ் வைரலான வீடியோ (sreen shot)

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகிசிவம், உலக தமிழ் சங்க இயக்குனர் பர்வீன் சுல்தானா சட்டமன்ற உறுப்பினர் தளபதி மற்றும் 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றிருந்தனர். இந்தப் பயிலரம் மூலம், பங்கேற்றுள்ள மாணவ மாணவிகளின் பேச்சுத் திறன் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.