இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடா பிரதமர் மார்க் கார்னி
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடா பிரதமர் மார்க் கார்னிpt web

நெதன்யாகுவை தூக்க காத்திருந்த கனடா., பதற்றத்தில் இஸ்ரேல் செய்த சம்பவம்... விரிசலில் இருநாட்டு உறவு?

நெதன்யாகுவை கைது செய்ய காத்திருக்கும் கனடாவிடம் பிரதமரை கைது செய்ய வேண்டாம் என இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. திடீரென இஸ்ரேல் இறங்கி வர காரணம் என்ன பார்க்கலாம்!
Published on

கனடா பிரதமர் மார்க் கார்னி, நெதன்யாகு கனடா வந்தால் கைது செய்வோம் என கூறியிருக்கும் நிலையில், நெதன்யாகுவை கைது செய்ய வேண்டாம் என இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்தது. இஸ்ரேல் ராணுவம் காசவில் உள்ள குடியிருப்புகள் மருத்துவமனைகள், அப்பாவி மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தது மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். பலர் வீடுகள் உறவுகளை இழந்து ஒருவேளை உணவுக்கே கையேந்தி வருகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் சொல்லி மீளா துயரம் தான். "இஸ்ரேல் பிரதமரின் இந்த செயல் மனித உரிமை மீறல்" என ஐநா பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

இதனைப் பொருட்படுத்தாத இஸ்ரேல் மீண்டும் காசா மக்கள் மீது தாக்குதல் நடத்தியது..

காஸா போர்
காஸா போர் pt web

இப்படி பரபரப்பான சூழலுக்கு மத்தியில், கடந்த ஆண்டு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வேதச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. அதே சமயம் ஸ்பெயின், அயர்லாந்து, உள்ளிட்ட பல நாடுகள் நெதன்யாகு தங்கள் நாட்டு எல்லைக்குள் வந்தால் கைது செய்வோம் என சூளுரைத்தன. இந்நிலையில் தான், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடாவுக்கு வந்தால், "அவரை நிச்சயம் கைது செய்வேன்" என கனடா பிரதமர் மார்க் கார்னி பகிரங்கமாக நேற்று அறிவித்திருந்தார். இவரது அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடா பிரதமர் மார்க் கார்னி
Chennai to White House| USA-ன் AI பிரிவின் ஆலோசகராக தமிழர் நியமனம்! யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

இந்த சூழலில், கனடாவில் நுழைந்தால் சர்வதேச நீதிமன்றம் கூறிய உத்தரவை அமல்படுத்துவேன் என சூளுரைத்த கனடாவின் இந்த முடிவை கைவிடுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது..அதே சமயம் நெதன்யாகுவை கைது செய்தால் இரு நாடுகளின் உறவுகள் கடுமையாக பாதிக்கும் என்பதால் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது..

இந்த விவகாரத்தில் தற்போது வரை கனடா தரப்பில் இருந்து எந்த அதிகார்பூர்வ தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடா பிரதமர் மார்க் கார்னி
#BREAKING | இளைஞர் அஜித்குமார் கொலை - SI-யிடம் நீதிபதி விசாரணை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com