செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட வாத்திமனை பகுதியைச் சேர்ந்தவர் ரஹீபூர் ரஹ்மான். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், பெங்களுாரில் உள்ள தனது மாமியர் வீட்டிற்குச் சென்றுள்ளார், இதையடுத்து; இன்று வீடு திரும்பிய ரஹீபூர் ரஹ்மான் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது, வீட்டின் உள் அறையில் பீரோவில் வைத்திருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது, உடனடியாக இந்த சம்பவம் குறித்து, ரஹீபூர் ரஹ்மான், ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டை ஆய்வு செய்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆம்பூர் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.