நவீன்குமார் - இறந்த அஜித்தின் சகோதரர் முகநூல்
தமிழ்நாடு

வளர்ச்சியடை​யாத பகு​தி​யில் வீட்​டு மனை பட்டா... ஆதங்கத்தை தெரிவித்த அஜித்தின் சகோதரர்!

அஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பான வழக்கு உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நேற்று (8.7.2025) நடைபெற்​றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நவீன்குமார் வீட்டு மனை பட்டா குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற நிகிதா, தனது தங்க நகை காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் உள்பட சிலரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த நிலையில், பிரேதப் பரிசோதனையில் அஜித்குமார் கடுமையான சித்திரவதைக்கு ஆளானதற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டன. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்தநிலையில் அஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பான வழக்கு உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நேற்று (8.7.2025) நடைபெற்​றது.

அப்போது பேசிய அஜித்​கு​மாரின் சகோ​தரர் நவீன்​கு​மார், ” நகை திருட்டு புகார் தொடர்பாக எனது சகோதரர் அஜித்குமாரை மட்டுமின்றி, என்னையும் போலீஸார் கடுமையாக தாக்கினர். போலீஸாரின் தாக்குதலால் அஜித்குமார் உயிரிழந்த நிலையில், எனக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தமிழக அரசால் தற்போது எனக்கு காரைக்​குடி ஆவினில் வேலைவாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இது அரசு வேலை இல்​லை. மேலும், ஆவின் அலு​வல​கம் 80 கி.மீ. தொலை​வில் உள்ளது. எனவே, மதுரை​யிலேயே அரசுத் துறை​யில் பணி வழங்க வேண்​டும். வளர்ச்சியடை​யாத பகு​தி​யில் எங்​களுக்கு வீட்​டு மனை பட்டா வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதி​லும் எங்​களுக்கு திருப்தி இல்​லை. அஜித்​கு​மார் உயி​ரிழப்​பில் சம்​பந்​தப்​பட்ட காவல் துறை உயர் அதி​காரி​களுக்​கும் தக்க தண்டனை பெற்​றுத்தர வேண்​டும். ” என்று அவர் கூறி​னார்.

முன்​ன​தாக, அஜித்​கு​மார் வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் விசாரணைக்கு வந்​த​போது “ நவீன்​கு​மாருக்கு வழங்​கப்​பட்ட ஆவின் பணி, அரசுப் பணி​யல்ல” என்று தெரிவிக்​கப்​பட்டது. அதற்கு நீதிப​தி​கள், “ஆவின் அரசின் கட்​டுப்​பாட்​டில் உள்ள நிறு​வனம்​தான்” என்​றனர்​ என்பது குறிப்பிடத்தக்கது.