flight file photo
தமிழ்நாடு

தொடர் விடுமுறை: 3 முதல் 4 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்!

தொடர் விடுமுறை காரணமாக விமானக் கட்டணம் 3 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

Rishan Vengai

தீபாவளி விடுமுறை காரணமாக விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு உயர்ந்துள்ளன. சென்னையிலிருந்து கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் அதிக கட்டணம் செலுத்தத் தவறவில்லை.

தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு முக்கிய நகரங்களுக்கான விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு வரை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன.

குறிப்பாக, சென்னையில் இருந்து கோவைக்கு விமானக் கட்டணம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 14 ஆயிரத்து 870 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து திருச்சிக்கு 14 ஆயிரத்து 778 ரூபாயாகவும், தூத்துக்குடிக்கு 17 ஆயிரத்து 363 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

flight

இதே போல, டெல்லி, மும்பை, ஹைதராபாத் செல்லும் விமான பயணக் கட்டணமும் அதிகரித்துள்ளது. வழக்கமான கட்டணங்களை விடப் பல மடங்கு கூடியிருந்தபோதும், சொந்த ஊர்களில் பண்டிகையைக் கொண்டாட விரும்பும் பயணிகள் வேறு வழியின்றி அதிக கட்டணம் செலுத்திப் பயணிக்கின்றனர்.