சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 700 ரெயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 7 மணிக்கு இந்த ரயில் சேவை தொடங்கவுள்ளது.
அதேபோல், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு, இரவு 7 மணி 36 நிமிடங்களுக்கு ரயில் புறப்படவுள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு இடையே 14 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நடப்பு ஆண்டில் இம்மாதம் (ஏப்ரல்) முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெயில் சுட்டெரிக்கும் நேரமான காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, இந்த குளிர்சாதன ரயில்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.