சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் 144 வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சி தொடரும் நிலை உருவானது. எஸ்.பி. வேலுமணி தரப்பு 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்ததால், அதிமுகவில் EPS மற்றும் SPV என இரு அணிகள் மோதல் தீவிரமடைந்துள்ளது. யார் உண்மையான அதிமுக என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்போது அதிமுகவில் தகுதிநீக்கமும் கட்சியில் பிளவை மேலும் அதிகரித்துள்ளது.
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவில் முதல்வர் விஜய்க்கு 117-க்கு 144 என்ற பெரும்பான்மை எட்டியதால், முதல்வர் விஜய்யின் ஆட்சி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு அதிமுக MLA-க்கள் 25 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் 144 எண்ணை எட்டி தவெக நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
ஆனால், EPS தரப்பு MLA-க்கள் 22 பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் யார் அதிமுக என்ற கேள்வி எழுந்தது. அதுமட்டுமில்லாமல், பாமக 4 MLA-க்கள், பாஜக MLA ஒருவர் என 5 பேர் நடுநிலை என்ற முடிவை எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானால், அக்கட்சியின் மொத்த பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் ஆதரவு அவசியம்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு 22 உறுப்பினர்களையும் எஸ்.பி. வேலுமணி தரப்பு 25 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.
மொத்த அதிமுக உறுப்பினர்கள் 22 + 25 = 47 உள்ள நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்கத் தேவையான 2/3 பங்கு உறுப்பினர்கள், அதாவது, 47-ல் 2/3 என்றால் 31.33 ஆகும், குறைந்தது 32 உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து முடிவெடுத்தால் மட்டுமே அவர்கள் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும்.
வேலுமணிக்கு ஆதரவாக 25 பேர்.. இவர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 32-க்கும் குறைவாக இருப்பதால் (வெறும் 25 பேர்), எடப்பாடி பழனிசாமி தரப்பு 'விப்' உத்தரவை மீறியதாகக் கூறி இவர்களைத் தகுதி நீக்கம் செய்யச் சபாநாயகரிடம் மனு அளிக்க முடியும்.
கட்சித் தாவல் புகாரில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சட்டமன்ற சபாநாயகருக்கே உண்டு. பொதுவாக, இத்தகைய சூழல்களில் சபாநாயகர் எடுக்கும் முடிவே இறுதியானது, எனினும் நீதிமன்றங்கள் இதில் தலையிட வாய்ப்புள்ளது.
வேலுமணி தரப்பு தாங்கள் தான் "உண்மையான அதிமுக" என்று உரிமை கோரினாலோ அல்லது மற்றொரு கட்சியுடன் இணைவதாக அறிவித்தாலோ, தேர்தல் ஆணையத்தின் முடிவும் இதில் முக்கியத்துவம் பெறும்.
தற்போதைய 47 உறுப்பினர்களில், வேலுமணி தரப்பிடம் உள்ள 25 பேர் என்பது 2/3 32 என்று பெரும்பான்மை கிடையாது. எனவே, சட்டப்படி இவர்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்க எடப்பாடி தரப்பிற்கு முழு உரிமை உள்ளது. ஆனால், சபாநாயகர் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கிறார் என்பதில்தான் இந்த 25 எம்.எல்.ஏ-க்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.