எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளம்
தமிழ்நாடு

அதிமுக | 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 20 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் மறுப்பு?

அதிமுக தனது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 127 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Prakash J

அதிமுக தனது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 127 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிமுகவில் தற்போதைய 20 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக, சசிகலா - ராமதாஸ் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜகவுக்கு - 27 தொகுதிகளும், பாமகவுக்கு - 18 தொகுதிகளும், அமமுகவுக்கு - 11 தொகுதிகளும், த.மா.காவுக்கு 5 இடங்களும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 இடங்களும், ஜான் பாண்டியன் கட்சி மற்றும் புரட்சி பாரதம் கட்சிக்கு தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அக்கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக தனது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 127 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, கும்மிடிப்பூண்டி ஏ. சுதாகர், பொன்னேரி (தனி) சிறுணியம் ஞ.பலராமன், திருவள்ளூர் பி.வி.ரமணா, மாதவரம் ஏ.மூர்த்தி, திருவொற்றியூர் குப்பன், ஸ்ரீபெரும்புதூர் (தனி) மு.பழனி, தாம்பரம் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன், செங்கல்பட்டு ஆ.கஜா (எ) கஜேந்திரன், செய்யூர் (தனி) ராஜசேகர், மதுராந்தகம் (தனி) மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் ஏ.சோமசுந்தரம், அரக்கோணம் (தனி) சு.ரவி, கோயம்புத்தூர் தெற்கு அம்மன் மு.அர்ச்சுணன், சிங்காநல்லூர் ஜெயராம், கிணத்துக்கடவு தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை (தனி) லட்சுமண சிங், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், பழனி ரவி மனோகரன், ஆத்தூர் விஸ்வநாதன், நிலக்கோட்டை (தனி) தேன்மொழி, வேடசந்தூர் பரமசிவம், அரவக்குறிச்சி செல்வக்குமார், கிருஷ்ணராயபுரம் (தனி) திவ்யா, குளித்தலை கருணாகரன், மணப்பாறை விஜயகுமார், ஸ்ரீரங்கம் மனோகரன், திருச்சிராப்பள்ளி (கிழக்கு) ராஜசேகரன், திருவெறும்பூர் குமார், லால்குடி லீமா ரோஸ், முசிறி யோகநாதன், துறையூர் (தனி) சரோஜா, பெரம்பலூர் (தனி) இளம்பை தமிழ்ச்செல்வன், பண்ருட்டி மோகன், கடலூர் சம்பத், குறிஞ்சிப்பாடி புவனேந்திரன், புவனகிரி அருண்மொழிதேவன், சிதம்பரம் பாண்டியன், சீர்காழி (தனி) சக்தி, பூம்புகார் பவுன்ராஜ், நாகப்பட்டினம் தங்க.கதிரவன், திருத்துறைப்பூண்டி பாலதண்டாயுதம், திருவிடைமருதூர் (தனி) இளமதி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் அதிமுகவில் தற்போதைய 20 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 20 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.