நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

"அதிமுக-வை விமர்சித்து பதிவுகள் கூடாது" - கட்சியினருக்கு நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

'பாஜக-வில் இருந்து கொண்டு அதிமுக-வை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்; என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: விக்னேஷ்முத்து

பா.ஜ.க. ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை கமலாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வரும், அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்ட பாஜகவினரின் 15 சமூக வலைதள கணக்குகளை குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுதுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (இந்த 15 எக்ஸ் வலைதள கணக்குகளும், அண்ணாமலை படத்துடன், அண்ணாமலைக்கு ஆதரவாகவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து எழுதி வருபவை).

நயினார் நாகேந்திரன்

பாஜகவினரின் சமூக வலைதள செயல்பாடுகளை கண்காணிக்க புதிதாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது MEN (Media empower  network ) என்று பெயரிடப்பட்டுள்ள குழு மூலம் பாஜகவினர் பங்கேற்கும் ஊடக விவாதம், சமூக வலைதள பதிவுகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர்.

பாஜகவில் இருக்கும் எந்த தனி நபருக்கும் ஆதரவாக , மற்ற நிர்வாகிகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.