Sellur Raju
Sellur Raju pt desk
தமிழ்நாடு

அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது: அமித்ஷா எதையாவது பேசுவார் - செல்லூர் ராஜூ விமர்சனம்

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரையில் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவித்த தலைப்பாகையோடு வந்த செல்லூர் ராஜூ, சரவணனுக்கு வாக்களிக்க கோரிக்கை விடுத்தார். மேலும் வட மாநிலத்தவர்கள் பாசி மாலைகளையும் அணிவித்து அன்பை வெளிப்படுத்தினர்.

இதைப்பார்த்து "மோடி போல் இருக்கீங்க" என கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் கூறியதை அடுத்து வாய்விட்டு சிரித்த செல்லூர் ராஜூ, "இந்த கெட்டப் தாதா போல உள்ளதா?" என்று கிண்டலடித்து போட்றாதீங்கப்பா என்று கலகலப்பாக பேசினார்.

Sellur Raju

திராவிட இயக்க திட்டங்களையே மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன:

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ பேசுகையில்... அமித்ஷா எதையாவது பேசுவார். திராவிட இயக்கங்கள்தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தது. திராவிட இயக்க திட்டங்களையே மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. எல்லா மாநிலங்களையும் விட தமிழகமே எல்லாவற்றிலும் முதன்மையாக உள்ளது. குஜராத், உ.பி போன்ற மாநிலங்களுக்கே தமிழகத்தின் நிதியைதான் கொடுக்கிறார்கள். தமிழக நிதியைதான் வட மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கிறது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் அப்படி பேசுகிறார்கள்.

அண்ணாமலை ஒரு நகைச்சுவையாளராக மாறிவிட்டார்:

அண்ணாமலை பேச்சை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. அண்ணாமலை என்ன ஜோசியரா? அவர் என்ன விசுவாமித்திரரா? சொல்வதெல்லாம் நடக்குமா? அதிமுக ஒரு பீனிக்ஸ் பறவைபோல. எத்தனையோ சோதனைகளை தாண்டி வந்துள்ள இயக்கம். அண்ணாமலை ஒரு நகைச்சுவையாளராக மாறிவிட்டார். அண்ணாமலையின் பேச்சு வேடிக்கையானது. நகைச்சுவையானது. கோவையில் தோற்றுவிடுவோம் என்ற தோல்வி பயத்தில் ஏதேதோ பேசி வருகிறார்.

Modi & Amit shah

எத்தனை மலை வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது:

அண்ணாமலை பேசட்டும். இன்னும் எத்தனை நாளைக்கு அப்படி பேசுவார் என பார்ப்போம். எத்தனை மலை வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அண்ணாமலையை ஏற்கெனவே கிழி கிழினு கிழித்துவிட்டேன். இனி அண்ணாமலையை பற்றி பேச ஒன்றும் இல்லை. அண்ணாமலை ஒன்றும் சூப்பர் ஸ்டார் அல்ல. ஜூஜூபி. அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது.

அதிகம் கூட்டம் கூடும் பாண்டி பஜாரில் பிரதமர் பேரணியில் கூட்டம் இல்லை:

ரோடு ஷோ நடத்துவதற்கு பாரதப் பிரதமரை அழைத்து வந்து அவரின் செல்வாக்கை தமிழகத்தில் அண்ணாமலை குறைத்துவிட்டார். தமிழகத்திலேயே அதிகம் கூட்டம் கூடும் பாண்டி பஜாரில் நடந்த பிரதமர் பேரணியில் கூட்டம் இல்லை. இதனால் பிரதமர் வருத்தத்தில் உள்ளார். அமித்ஷா கை அசைத்ததற்கு தேநீர் கடையில் நின்றவர்கள் கூட பதிலுக்கு கையசைக்கவில்லை. பிரதமர் மற்றும் அமித்ஷா எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தேர்தலுக்கு பின்பு தான் தெரியும்.

Annamalai

திமுகதான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி:

திமுக தான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி. இன்று பரப்புரைக்கு செல்லும் அமைச்சர்கள், முதலமைச்சர், உதயநிதியை எதிர்த்து பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். பரப்புரைக்கே செல்ல முடியாமல் உள்ளனர்." என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.