அண்ணாமலை, ஜெயக்குமார் pt web
தமிழ்நாடு

“பிரிவினைதான் பாஜகவின் வேலை” - மீண்டும் சூடுபிடிக்கும் விவாதம் அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!

"எம்ஜிஆர் உடன் யாரையும் ஒப்பிட முடியாது. யாருடன் ஒப்பிட முடியாத மாபெரும் தலைவர் எம்ஜிஆர்" - ஜெயக்குமார்.

அங்கேஷ்வர்

செய்தியாளர் சந்தான குமார்

எம்ஜிஆர் நினைவு தினம்

முன்னாள் முதலமைச்சர் எம். ஜி.ஆரின் 37ஆவது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “எம்.ஜி.ஆர் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எம்ஜிஆருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. எம்ஜிஆரின் எண்ணங்களை மோடி செயல்படுத்தி வருகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் போன்றோர் மரியாதை செலுத்தினர். பின்னர், எம்.ஜி.ஆர். வகுத்து தந்த பாதையில் தடம் மாறாது, தடுமாறாது பயணிப்போம் என்று உறுதிமொழியும் மேற்கொண்டனர்.

எம்ஜிஆர் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை MGR | MGRMemorial | EdappadiPalaniswami | ADMK

நிகழ்வுக்குப் பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எம்ஜிஆர் அவர்கள் விட்டுச் சென்ற கனவுகளை முழுமையான அளவுக்கு நனவாக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். எம்ஜிஆர் அவர்கள் கலைத்துறையிலும் அரசியலிலும் ஆட்சியிலும் முத்திரை பதித்தவர், உலகம் உள்ளவரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.

யாருடனும் ஒப்பிட முடியாதவர் எம்ஜிஆர்

எம்ஜிஆர் உடன் யாரையும் ஒப்பிட முடியாது. யாருடன் ஒப்பிட முடியாத மாபெரும் தலைவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் சாதி சமயம் பார்க்காமல் வேறுபாடு பார்க்காமல் மதரீதியான அரசியல் செய்யாமல் வாழ்ந்தவர். இதையெல்லாம் அண்ணாமலை ஒத்துக்கொள்கிறாரா?

அண்ணாமலை

விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், அனைத்து சமயத்தினரும் போற்றக்கூடிய தலைவராக எம்ஜிஆர் திகழ்ந்தார். அதுபோல பிரதமர் மோடியை பார்க்கிறார்களா? மதத்தால் பிரிவினை செய்வதுதான் பிஜேபியினுடைய வேலையாக உள்ளது. பிஜேபியில் சமநிலை எங்கே உள்ளது? மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகத்தான் எம்ஜிஆர் மற்றும் மோடியை பார்க்க முடியும்.

திமுக சொல்வது கட்டுக்கதை

2026ல் ஜெயலலிதா ஆட்சிதான் அமையும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் அமையும். அதில், எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.

சிறும்பான்மையினருக்கு திமுகதான் பாதுகாப்பானதாக இருக்கிறது என முதலமைச்சர் சொல்கிறார். 1998 இல் அத்வானி வருகையின் போது கோவை மாவட்டத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அப்போது திமுக ஆட்சியை கலைத்து விடுவார்களோ என அஞ்சி இஸ்லாமியர்களை எல்லாம் கைது செய்தார்கள். மசூதிகளுக்குள் எல்லாம் ரைடு நடத்தினார்கள். இஸ்லாமியர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். வாக்குறுதிகளை கொடுத்ததுபோல், அவர்களை விடுவிக்க வேண்டியதுதானே? 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என திமுக சொல்வது கம்பி கட்டும் கதை” எனத் தெரிவித்தார்.