மோகன் பாபு
மோகன் பாபுகோப்புப்படம்

மறுக்கப்பட்ட ஜாமீன்... எப்போது வேண்டுமானாலும் நடிகர் மோகன் பாபு கைதாகலாம்!

நடிகர் ரஜினிகாந்துடன் பெத்தராயுடு படத்தில் நடித்த தெலங்கு நடிகர் மோகன் பாபுவுக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதால் அவர் எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
Published on

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே சொத்துப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் மாறிமாறி போலீஸில் புகாரளித்து வருகின்றனர்.

மோகன் பாபு, மஞ்சு மனோஜ்
மோகன் பாபு, மஞ்சு மனோஜ்

இது தொடர்பாக செய்தி சேகரிக்கப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற பத்திரிகையாளர்களை மோகன் பாபுவும், அவரது ஆதரவாளர்களும் விரட்டியடித்தனர். தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் மைக்கைப் பறித்து அதைக்கொண்டே அவரைத் தாக்கிய காட்சி வைரலானது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மோகன் பாபு உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு இதயநோயும், நரம்புக் கோளாறும் இருப்பதாகக் கூறி முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தெலங்கானா அரசுத் தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது முன் ஜாமீன் மனுவை தெலங்கானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகர் ரஜினிகாந்துடன் பெத்தராயுடு, சூர்யாவுடன் சூரரைப் போற்று போன்ற படங்களில் மோகன் பாபு நடித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com