நடிகை கௌதமி pt desk
தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோயிலில் நடிகை கௌதமி சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளர் கௌதமி சாமி தரிசனம் செய்தார்.

PT WEB

செய்தியாளர்: B.R.நரேஷ்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளரும், பிரபல திரைப்பட நடிகை கௌதமி சாமி தரிசனம் செய்தார்.

திருக்கோயில் சார்பில் கௌதமிக்கு சந்தனம், பிரசாதம், மலர் மாலை, ஆகியவை பிரசாதமாக அவருக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்து முன்பு பத்து நிமிடம் அமர்ந்திருந்த நடிகை கௌதமி முருகப்பெருமானை தியானம் செய்து வழிபட்டார்.

இதனைத் தொடர்ந்து மலைக்கோயில் முதல் மலை அடிவாரம் வரை கௌதமி ரசிகர்கள் மற்றும் அவரது கட்சிக்காரர்கள் அவருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.