செய்தியாளர்: ரமேஷ்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நத்தமாடிபட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண வந்த நடிகர் சியான் விக்ரம், நடிகை துஷாரா விஜயன்.. பார்வையாளர்களோடு கேலரியில் அமர்ந்து வீரர்களை கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு பேசிய நடிகர் விக்ரம்... நான் முதன்முதலில் ஜல்லிக்கட்டை பார்க்கிறேன்.. நான் வீர தீர சூரன் அல்ல.. உண்மையான வீர தீர சூரர்கள் நீங்கள்தான். காளையை அடக்கும் இந்த வீரர்கள் தான். இவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் என்று பேசினார். இதையடுத்து நடிகை துஷாரா விஜயன் பேசும்போது, நம்மூர் திருவிழா அதை காண நேரில் வந்துள்ளேன் என்றார்.