நடிகர் விஜய்
நடிகர் விஜய்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் நடிகர் விஜய்!

ஜெனிட்டா ரோஸ்லின்

தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி போன்ற மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்காக நேற்று காலை தூத்துகுடி புறப்பட்ட நடிகர் விஜய் தற்போது அம்மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் கூட்டத்திற்கு சென்ற நடிகர் விஜய் துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவிதொகையும், தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கப்பட்டு இறந்த மக்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகையும், வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணத் தொகையினை காசோலையாக வழங்கினார்.

சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற நிவாரணப் பொருட்கள் வழங்க வழங்கினார். முதலில் நிவார தொகையினை வழங்கிய அவர் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.வரிசையாக நின்று நிவாரண உதவிகள் வழங்கப்படாமல் மக்களின் இருக்கைகளுக்கு அருகே சென்று உதவிகள் வழங்கப்பட்டது.

மண்டபத்தில் முன்புறம் வர இயலாத அளவிற்கு கட்டுக்கடங்காத கூட்டத்தினால் விஜய்யின் வாகனம் மண்டபத்தின் பின்புறமாக நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் 1500 பேருக்கு 21 வகையான உணவுகள் சமைக்கப்பட்டுள்ளது. விஜய் அவர்களோடு சேர்ந்து உண்பதற்கும் ,பின்னர் மக்களிடம் உரையாற்றுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வழங்கப்படும் இந்த நிவாரணப்பொருட்களானது விஜய் ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தினை சேர்ந்த நபர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அப்பகுதிகளை பார்வையிட்டு பாதிப்புகளின் அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படுகிறது என்பது கூடுதலான செய்தி.