தென்கரை காவல் ஆய்வாளர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் pt
தமிழ்நாடு

லஞ்சம் வழங்காததால் பொய் வழக்கு..? காவல் ஆய்வாளர் மீது பெண் புகார்.. ஐஜி நடவடிக்கை!

பழிவாங்கும் நோக்கத்தோடு ஸ்பா உரிமையாளர் மீது பொய் வழக்கு போட்டு துன்புறுத்தியதாக தென்கரை காவல் ஆய்வாளர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

PT WEB

லஞ்சம் வழங்காததால் பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக புகார்; ஐஜி நடவடிக்கை எடுத்து காவல் அதிகாரிகள் மாற்றம்.

தேனி அருகே அன்னஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா தேவி (30), இவர் பெரியகுளம் தென்கரைப் பகுதியில் உரிய அனுமதியுடன் ஆயுர்வேதிக் ஸ்பா நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் அர்ச்சனா தேவி நடத்தி வந்த ஸ்பாவில் தென்கரை காவல் ஆய்வாளர் பிரேம்சந்த் தலைமையில் போலீசார் ஆய்வு செய்து சட்டத்திற்கு புறம்பான செயல் நடைபெறுவதாக கூறி அர்ச்சனா தேவி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தனது நண்பர் நடத்தி வந்த ரெஸ்டாரன்டிற்க்காக போலீசாருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த மாமுல் கடந்த மாதம் வழங்காததால், அதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு தன் மீது பொய் வழக்கு போட்டு தன்னை காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தியதாக அர்ச்சனா தேவி மதுரை தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதமீடம் நேற்று புகார் அளித்தார்.

புகார் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தென்கரை காவல் ஆய்வாளர் பிரேம்சந்த் மற்றும் காவல் நிலைய எழுத்தர் முத்துக்குமார் ஆகியோரை திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.

பொய் வழக்கு தொட்டு துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் நேற்று புகார் அளித்த நிலையில், இன்று விசாரணைக்கு உள்ளான ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.