செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெரிய கடை வீதி பகுதியில் வசித்து வரும் சுக்கூர் என்பவரது மகன் அப்ரான் (4) கடந்த 2ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது அப்பகுதியில் ஓடிவந்த ஒரு தெருநாய் அப்ரானை விரட்டி கீழே தள்ளி முகத்தில் கடித்ததுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அதன் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.
இந்நிலையில், கறம்பக்குடியில் கடந்த இரண்டு மாதங்களில் இதே போல் 10-க்கும் மேற்பட்டோரை வெறி நாய்கள் கடித்துள்ளதாகவும், இனிமேல் இது போன்ற ஒரு சம்பவம் நடக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கறம்பக்குடி பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.