ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நாடாளுமன்றம்
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நாடாளுமன்றம்எக்ஸ் தளம்

ராகுல், பிரியங்கா உ.பி-க்குள் செல்ல அனுமதி மறுப்பு... மக்களவையிலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள் நுழைய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ரேபரேலி தொகுதி எம்.பி. ராகுல் காந்திக்கும், வயநாடு தொகுதி எம்.பி பிரியங்கா காந்திக்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்தது சர்ச்சையாகியுள்ளது.
Published on

உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள் நுழைய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ரேபரேலி தொகுதி எம்.பி. ராகுல் காந்திக்கும், வயநாடு தொகுதி எம்.பி பிரியங்கா காந்திக்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்தது சர்ச்சையாகியுள்ளது.

முன்னதாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டனர். ஆனால், அவர்களை டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையான காசியாபாத்திலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தடுத்து நிறுத்தப்பட்ட எம்.பி.க்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி
தடுத்து நிறுத்தப்பட்ட எம்.பி.க்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

இதற்கு காரணாமாக “நிலவிவரும் அசாதாரண சூழலில் சம்பலுக்கு அரசியல் கட்சியினர் செல்வது நிலைமையை மேலும் மோசமாக்கும்” என உத்தரப்பிரதேச அரசு கூறி வருகிறது. இருப்பினும் ராகுல், பிரியங்காவிற்கு அனுமதி மறுத்ததன் காரணமாக, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை சரிசெய்ய நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நாடாளுமன்றம்
சம்பல் மசூதி வழக்கு: என்ன நடக்கிறது? வழக்கு என்ன?

கிட்டதட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தங்களை உத்தரப்பிரதேசத்துக்குள் அனுமதிக்க வலியுறுத்தினர். இருப்பினும் அனுமதி கிடைக்காததால் ராகுல் காந்தி மற்றும் பிரயங்கா காந்தி தங்களது ஆதரவாளர்களுடன் டெல்லிக்கு திரும்பினர்.

இந்நிலையில், ராகுல் மற்றும் பிரியங்காவை உத்தரப்பிரதேசத்திற்குள் செல்ல அனுமதிக்காததை கண்டித்து முழக்கங்களை எழுப்பி மக்களவையிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர். மேலும், சமாஜ் வாதியை சேர்ந்த எம்.பி.க்களும், I.N.D.I.A. கூட்டணியை சேர்ந்த ஒரு சில கட்சிகளும் இந்த வெளிநடப்பில் பங்கேற்றுள்ளனர்.

இதுக்குறித்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “எதிர்க்கட்சித் தலைவராக உ.பி சம்பல் பகுதிக்கு செல்வது என் உரிமை; ஆனால், காவல்துறை அனுமதிக்கவில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேச காங்கிரஸ் விரும்புகிறது; எங்களுக்கு அனுமதி வழங்காதது அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com