திருப்பரங்குன்றம் மலை pt
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் | இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் 8 பேர் கைது!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் 8 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

PT WEB

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம் என்று இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் எட்டு பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.

இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் கைது..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் என்று இந்து அமைப்பினர் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

புதுக்கோட்டை காவல் நிலையம்

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் கற்பகவடிவேல் மற்றும் நிர்வாகி செந்தில்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பையா உட்பட 8 பேரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலில் வைத்துள்ளனர்.