வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த 4 மாத கர்ப்பவதி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். அவர் தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் சென்றபோது, இரண்டு பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
கழிவறைக்கு சென்றபோது அங்கும் அவர்கள் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் கர்ப்பவதி கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வேலூர்மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அந்தபெண்ணை அவர்கள் 2 பேரும் கீழே தள்ளியுள்ளனர். இதில், கை, கால் முறிவுஏற்பட்டு படுகாயமடைந்த அவர், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.