பக்தர்கள் பாதயாத்திரை
பக்தர்கள் பாதயாத்திரைpt desk

பழனி தைபூசத் திருவிழா அரோகரா கோஷத்துடன் கும்பகோணம் பக்தர்கள் பாதயாத்திரை

கும்பகோணத்தில் இருந்து பழனி தைபூசத் திருவிழாவிற்கு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடியுடன் பாதயாத்திரை புறப்பட்டனர்.
Published on

செய்தியாளர்: விவேக்ராஜ்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பருவத ராஜகுல மக்கள் ஆண்டுதோறும் பழனி தைப்பூச விழாவையொட்டி காவடி எடுத்து செல்வது வழக்கம். அதன்படி 76ம் ஆண்டாக காவடி யாத்திரை இன்று தொடங்கியது. இதில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடியை சுமந்து கொண்டு பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

முன்னதாக காவிரி ஆற்றில் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காவடியுடன் நடனமாடியபடி துக்காம்பாளையத ;தெரு, புதுப்பேட்டை, யானையடி சரவணத்தோப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். இதையடுத்து இன்று இரவு கும்பகோணம் பழையபேட்டை முனிஸ்வரன் கோவிலில் தங்குகின்றனர்.

பக்தர்கள் பாதயாத்திரை
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்|மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு

நாளை காலை பாதயாத்திரையை தொடங்கி சுவாமிமலை, திருவையாறு, தில்லைஸ்தானம், கூத்தூர், பவனமங்கலம், கோவிலடி, திருச்சி, திண்டுக்கல் வழியாக வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) பழனியை சென்றடைகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com