கடலூர் pt
தமிழ்நாடு

கடலூர்: கடலுக்குள் அடித்துச் செல்லப்படும் 32 உயிர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

கடலூரில் 32 மாடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

PT WEB

கடலூர் முதூநகர் பகுதி மோகன் சிங் தெருவை சேர்ந்த கேசவன், செல்வம், மனோகர், கலியமூர்த்தி, பாஸ்கர், குணா உள்ளிட்டவர்களின் 32 மாடுகள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. தினந்தோறும் மேச்சலுக்கு செல்லும் மாடுகள் மீண்டும் வீடு திரும்பும் என்று நினைத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கால்நடைகள் நேற்று வரை வீடு திரும்பாத நிலையில், தேவனாம்பட்டினம் அருகே ஆற்றில் இருந்து அவை கடலுக்கு அடித்துச் செல்லும் காட்சிகள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது இது சம்பந்தமாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 35 மாடுகள் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது 32 மாடுகள் என மொத்தமாக 60க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.