முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்முகநூல்

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு: நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! முழு விவரம்...

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
Published on

ஃபெஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் உள்ள மக்கள் உணவின்றியும், இருப்பிடங்களை இழந்தும் கண்ணீர் மழையில் தவிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பாகவும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் பல மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அதில், “பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும். புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரம்: கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதாக திமுக-வினரை முற்றுகையிட்ட மக்கள்!

இது குறித்தான அறிக்கையில்,

அறிக்கை
அறிக்கை

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது:

  • புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் ரூபாய் வழங்கிடவும்;

  • சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் வழங்கிடவும்;

  • முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும்,

  • மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்;

முதல்வர் ஸ்டாலின்
சாத்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதா? நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்!
  • பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500/- வழங்கிடவும்

அறிக்கை
அறிக்கை
  • மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-ஆக வழங்கிடவும்; எருது, பசு உள்ளிட்ட ரூ.37,500/-ஆக வழங்கிடவும்;

  • வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/- வழங்கிடவும்;

  • அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்;

  • வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும்;

அறிக்கை
அறிக்கை
  • கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/- வழங்கிடவும்;

  • அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில்,

  • இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்;

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com