ராமச்சந்திரன்  கோப்பு
தமிழ்நாடு

”சில கதை ஆசிரியர்களை நம்பி இழந்துவிட்டோம்” - நாதகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்த நிர்வாகி!

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட மாற்று கட்சியை சேர்த்தவர்கள் என மொத்தம் சுமார் 3 ஆயிரம் பேர் இன்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சமீப காலமாக நாம் தமிழர் கட்சியில் ஏற்படும் குளறுபடிகளும், மோதல்களும், தமிழக அரசியலில் பேசிபொருளாக மாறியுள்ளது. மேலும், பெரியார் மீது தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துகல், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உடன் எடுத்த புகைப்படம் போலி என்ற செய்தி என பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தநிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட மாற்று கட்சியை சேர்த்தவர்கள் என மொத்தம் சுமார் 3 ஆயிரம் பேர் இன்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாமக்கல் பகுதி மாவட்ட செயலாளர்கள், தஞ்சை முன்னாள் மாவட்ட செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் என 51 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாற்று கட்சியினர் என சுமார் 3 ஆயிரம் பேர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்களும் உடன் இருந்தனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த கோவை நிர்வாகியான, ராமச்சந்திரன் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அதில், ”சில கதை ஆசிரியர்களை நம்பி இவ்வளவு நாள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம் தற்போது தந்தையிடம் வந்து சேர்ந்துள்ளோம் . கதாசிரியர்களின் புரட்டுகளை நம்பிச் சென்று சீரழிந்தவர்கள் மீண்டு தந்தையிடம் வந்திருக்கிறோம். அனைத்தையும் இழந்து நாம் தமிழரில் பயணித்தோம், தகுதியற்ற சுயநலத் தலைமையை உணர்ந்து சரியான தலைமையான திமுகவிற்கு வந்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்து நாதகவினருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.