ராகுல் காந்தி
ராகுல் காந்திpt desk

இரும்புக் காலம் | முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை குறிப்பிட்டு ராகுல் காந்தி பெருமிதம்!

உலகின் இரும்புக் காலம் தமிழ்நாட்டில்தான் தொடங்கியது என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Published on

எக்ஸ் வலைதளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், இந்தியாவின் செழுமையான பாரம்பரியம், ஒட்டுமொத்த உலகத்திற்கும் உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள், 5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டதை உறுதிபடுத்தி உள்ளது.

CM Stalin Rahul gandhi
CM Stalin Rahul gandhipt desk

இந்தியாவின் ஆரம்பகால முன்னேற்றங்களை இது பிரதிபலிப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நமது தேசத்தின் எண்ணற்ற மைல்கற்களுடன், தமிழ்நாட்டின் பங்களிப்புகள், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி
”அண்ணனின் தம்பிகளுக்கு.. பிரபாகரனை இழிவுபடுத்துவதை நிறுத்திவிடுங்கள்..” - இயக்குநர் ராஜ்குமார்!

ஒவ்வொரு மாநிலம், சமூகம் மற்றும் குரலில் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வுகளை கொண்டாடுவோம் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com