Vijay & tvk women candidates  PT
தமிழ்நாடு

’இதுதான் மாஸ்..’ சட்டமன்றத்துக்கு செல்லும் 13 தவெக பெண் MLA-க்கள்!

பெண் எம்.எல்.ஏக்களுடன் சட்டமன்றத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் செல்லும் நிலையில், திமுகவில் போட்டியிட்ட அனைத்து பெண் வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

PT WEB

2026 சட்டமன்றத் தேர்தலில் 23 பெண் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளனர். புதிய சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் 13 பெண் வேட்பாளர்களை சட்டமன்றத்துக்கு அனுப்பி, பெண்கள் பிரதிநிதித்துவத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 23 பெண்கள் தங்களின் வெற்றியைப் பதிவு செய்து, சட்டமன்றத்திற்குள் கம்பீரமாக நடைபோட உள்ளனர். அரசியல் களத்திற்குப் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், பெண் பிரதிநிதித்துவத்தில் மற்ற கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

Vijay TVK campaign

அக்கட்சியைச் சேர்ந்த 13 பெண்கள் வெற்றி வாகை சூடி, சட்டமன்றத்தில் முதல்முறையாகக் கால் பதிக்கவுள்ளனர். இது அக்கட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது. பிரதான கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட்ட பெண்களில் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதே போல, காங்கிரஸ், பாமக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சியாகப் பார்க்கப்படுவது, ஆளுங்கட்சியாக இருந்த திமுக சார்பில் போட்டியிட்ட 19 பெண் வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வென்ற பெண் வேட்பாளர்கள் பட்டியல் -

திரு.வி.க நகர் - பல்லவி,

பல்லாவரம் - காமாட்சி,

ராணிப்பேட்டை - தாஹிரா,

குடியாத்தம் - சிந்து,

குமாரபாளையம் - விஜயலட்சுமி,

பவானிசாகர் - தமிழ்செல்வி,

அவிநாசி - கமலி,

திருப்பூர் வடக்கு - சத்தியபாமா,

கவுண்டம்பாளையம் - கனிமொழி,

கிருஷ்ணராயபுரம் - சத்யா,

குழந்தை ராணி - சிங்கங்கை,

கீர்த்தனா - சிவகாசி,

ஜெகதீஸ்வரி - ராஜபாளையம்.