செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி புதிய தலைமுறை
தமிழ்நாடு

செம்பரம்பாக்கத்தில் 1,000 கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஜெனிட்டா ரோஸ்லின்

24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.35 அடியாக உயர்ந்துள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர் இருப்பு 3,210 மில்லியன் கன அடியாக உள்ளது. மழை தொடர்வதாலும், அடுத்த வரும் நாட்களிலும் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்பதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து நீர்திறப்பு 200 கன அடியில் இருந்து ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. அதனால், அடையாற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடையாற்றில் 40,000 கன அடி நீர் வரை திறக்கலாம் என்றும், அதனால் பொதுமக்கள் செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதல் நீர் திறக்கப்படுவதை நினைத்து அச்சமடைய வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

முழுக்க முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.