Most T20 titles winning Franchise, Player, Captain pt
T20

டி20 வரலாற்றில் அதிக கோப்பைகள் | வென்ற பிரான்சைஸ்? வீரர்கள்? கேப்டன்? யார்?

டி20 கிரிக்கெட்டானது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. பல உலக நாடுகள் டி20 லீக்கை நடத்த ஆர்வம் காட்டிவரும் நிலையில், உலகின் அனைத்து லீக்குகளிலும் எந்த டி20 அணி அதிக கோப்பை வென்றுள்ளது? எந்த வீரர், கேப்டன் அதிக கோப்பை வென்றுள்ளார்? என்பதை பார்க்கலாம்!

Rishan Vengai

அதிக டி20 கோப்பைகள் வென்ற பிரான்சைஸ்?

மும்பை இந்தியன்ஸ் - 13

மும்பை இந்தியன்ஸ் பிரான்சைஸ் ஆனது தங்களுடைய டி20 கிரிக்கெட் ஆதிக்கத்தை உலகம் முழுவதும் பரப்பிவருகிறது. உலகம் முழுவதும் சிறந்த ஸ்கவுட்டிங் குழுவை வைத்திருக்கும் MI, பல்வேறு டி20 லீக்குகளில் 13 கோப்பைகளை வென்று அதிக கோப்பைகள் வென்ற பிரான்சைஸ்ஸாக முதலிடத்தில் நீடிக்கிறது.

2025 மேஜர் லீக் கிரிக்கெட் கோப்பை வென்ற MI நியூயார்க்

ஐபிஎல் - 5 கோப்பைகள் - 2013, 2015, 2017, 2019, 2020

சாம்பியன்ஸ் லீக் - 2 கோப்பைகள் - 2011, 2013

மகளிர் பிரீமியர் லீக் - 2 கோப்பைகள் - 2023, 2025

மேஜர் லீக் கிரிக்கெட் - 2 கோப்பைகள் - 2023, 2025

ILT20 (UAE) - 1 கோப்பை - 2024

SA20 (தென்னாப்பிரிக்கா) - 1 கோப்பை - 2025

KKR

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 7

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைமையிலான நைட் ரைடர்ஸ் பிரான்சைஸ் கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அணிகளை கொண்டுள்ளது. அங்கு 4 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.

ஐபிஎல் - 3 கோப்பைகள் - 2012, 2014, 2024

கரீபியன் பிரீமியர் லீக் - 3 கோப்பைகள் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - 2017, 2018, 2020

கரீபியன் பிரீமியர் லீக் (பெண்கள்) - 1 கோப்பை - 2022

csk won clt20 title as first ipl team

சென்னை சூப்பர் கிங்ஸ் - 7

ஐபிஎல் கிரிக்கெட்டின் சாம்பியன் அணியாக விளங்கிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பல்வேறு லீக்களில் தங்களுடைய அணிகளை களமிறக்கியுள்ளது. 5 கோப்பைகளை வென்ற தோனி தலைமையிலான இந்த பிரான்சைஸ் நைட் ரைடர்ஸ் உடன் இடத்தை பகிர்ந்துகொள்கிறது.

ஐபிஎல் - 5 கோப்பைகள் - 2010, 2011, 2018, 2021, 2023

சாம்பியன்ஸ் லீக் - 2 கோப்பைகள் - 2010, 2014

அதிக டி20 கோப்பைகள் வென்ற வீரர்?

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு டி20 லீக்களில் விளையாடியிருக்கும் 3 வீரர்கள் அதிக கோப்பைகள் வென்று ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.

டிவைன் ப்ராவோ - 17 கோப்பைகள்

கிரன் பொல்லார்டு - 17 கோப்பைகள்

சோயப் மாலிக் - 16 கோப்பைகள்

அதிக டி20 கோப்பைகள் வென்ற கேப்டன்?

அதிக டி20 கோப்பைகள் வென்ற கேப்டன்களை பொறுத்தவரையில் பட்டியலில் தோனி, ரோகித் சர்மா மற்றும் சோயப் மாலிக் மூன்று பேர் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்த எண்ணிக்கை அவர்களின் சர்வதேச கோப்பை மற்றும் பிரான்சைஸ் கோப்பைகளின் எண்ணிக்கையோடு பட்டியலிடப்பட்டுள்ளது.

மகேந்திர சிங் தோனி - 9 கோப்பைகள்

ரோகித் சர்மா - 8 கோப்பைகள்

சோயப் மாலிக் - 5 கோப்பைகள்