விராட் கோலி IPL
T20

IPL கிரிக்கெட் | CSK அணிக்கு எதிராக அதிக ரன்கள்.. முதலிடம் பிடித்த கோலி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் விராட் கோலி.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ரைவல்ரி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

பரபரப்பாக தொடங்கி நடந்துவரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 196 ரன்கள் எடுத்தது.

csk vs rcb

இந்நிலையில் போட்டியில் 31 ரன்கள் அடித்த விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரராக மாறி சாதனை படைத்தார்.

சிஎஸ்கே அணிக்கு எதிராக கோலி சாதனை..

போட்டி தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 1057 ரன்களுடன் ஷிகர் தவான் முதலிடத்திலும், 1053 ரன்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.

இந்த சூழலில் இன்று நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 31 ரன்கள் அடித்த விராட் கோலி 1084 ரன்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

விராட் கோலி

ஏற்கனவே 4 வெவ்வேறு ஐபிஎல் அணிகளுக்கு எதிராக ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி வைத்துள்ளார்.

197 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் சிஎஸ்கே 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.