இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் திருவிழாவிற்கான மெகா வீரர்கள் ஏலமானது இன்றும், நாளையும் ( நவம்பர் 24 - 25) என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் அவர்களுக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இன்று ஏலத்தில் வீரர்களை வாங்கவுள்ளனர்.
367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிலையில், பல ஸ்டார் வீரர்கள் மிகப்பெரிய ஏலத்திற்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், இன்றைய நாள் ஐபிஎல் ஏலமானது 3.30 PM மணி முதல் நடைபெற்று வருகிறது.
6 ஆர்டிஎம் வாய்ப்புகளையும் பயன்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2024 ஐபிஎல் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அரைசதமடித்து கோப்பை வெல்ல உதவிய வெங்கடேஷ் ஐயரை வெளியேற்றியது.
கேகேஆர் அணி தன்னை தக்கவைக்காதது கண்ணீரை வரவழைத்ததாக வெங்கடேஷ் ஐயர் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் 2025 ஐபிஎல் ஏலத்தில் கடைசிவரை விட்டுக்கொடுக்காத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.23.75 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடிக்கு போன நிலையில், வெங்கடேஷ் ஐயரும் 23.75 கோடிக்கு சென்றுள்ளார்.
மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் இருவரையும் பஞ்சாப் கிங்ஸ் அணி, 11 கோடி மற்றும் 4.20 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
மிட்செல் மார்ஸை 3.40 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தட்டிச்சென்றது.
விக்கெட் கீப்பர் டிகாக்கை ரூ.3.60 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விலைக்கு வாங்கியுள்ளது.
ஜானி பேர்ஸ்டோ அன்சோல்டாக சென்றுள்ளார்.