ஐசிசி சார்பில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுவதுபோல, டெஸ்ட் போட்டிகளிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் லண்டனில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோத உள்ளன. முன்னதாக, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் இந்தியா தோல்வியைச் சந்தித்ததால், இதில் கலந்துகொள்ள முடியாமல் வெளியேறியது. இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.30.78 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு ரூ.18.46 கோடியும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொடரில், கலந்துகொண்ட 7 அணிகளுக்கு புள்ளிப் பட்டியல் அடிப்படையில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
3ஆவது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி பரித்தொகையும்,
4ஆவது இடம்பிடித்த நியூசிலாந்து அணிக்கு ரூ. 10.28 கோடியும்,
5ஆவது இடம்பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.8.22 கோடியும்,
6ஆவது இடம்பிடித்த இலங்கை அணிக்கு ரூ.7.19 கோடியும்,
7ஆவது இடம்பெற்ற வங்காளதேச அணிக்கு ரூ. 6.17 கோடியும்,
8ஆவது இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ.5.14 கோடியும்
கடைசி இடம்பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.4.11 கோடியும்
பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.