இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாட்டிங்ஹாமில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆனால் ஏன் பந்துவீச்சை தேர்வுசெய்தோம் என வருத்தப்படும் அளவு அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா, 15 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து 112 ரன்கள் குவித்து அசத்தினார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்திய ஸ்மிரிதி மந்தனா, TEST, ODI, T20 என 3 வடிவத்திலும் சதமடித்த முதல் இந்திய வீராங்கனையாக சாதனை படைத்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 210 ரன்கள் குவித்து, பலம் வாய்ந்த இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடித்த இரண்டாவது அணியாக சாதனை படைத்தது.