shivam dube web
T20

காயத்திற்கு பிறகு களம்கண்ட ஷிவம் துபே.. பறந்த 7 சிக்சர்கள்.. 36 பந்தில் 71 ரன்கள்!

முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு சையத் முஷ்டாக் அலி தொடரில் களம்கண்டிருக்கும் ஷிவம் துபே 7 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டியுள்ளார்.

Rishan Vengai

2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது. இதில் மும்பை அணிக்காக களம்கண்டிருக்கும் ஷிவம் துபே காயத்திற்கு பிறகு பங்கேற்ற முதல் போட்டியிலேயே 7 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டியுள்ளார்.

முன்னதாக வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக முதுகில் காயமடைந்த ஷிவம் துபே, வங்கதேச தொடரை மட்டுமில்லாது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரையும் நழுவவிட்டார்.

dube

இந்நிலையில் தற்போது சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்காக பங்கேற்ற துபே 36 பந்தில் 7 சிக்சர்கள் உட்பட 71 ரன்களை குவித்துள்ளார்.

7 சிக்சர்கள்.. 2 பவுண்டரிகள்.. 71 ரன்கள்!

சர்வீசஸ் (Services) அணிக்கும் மும்பை அணிக்கும் இடையேயான போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. பிரித்வி ஷா 0 ரன்னில் வெளியேற, ரஹானே மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் 22, 20 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.

இந்நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஷிவம் துபே மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய ஷிவம் துபே 7 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என துவம்சம் செய்து 36 பந்தில் 71 ரன்களை குவித்து மிரட்டினார். மறுபுறம் தன்னுடைய பங்கிற்கு மிரட்டிவிட்ட சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 70 ரன்கள் அடித்தார். 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி மும்பை அணி 192 ரன்கள் குவிக்க உதவியது.

அதன்பிறகு விளையாடிய சர்வீசஸ் அணி 153 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

shivam dube

ஷிவம் துபேவின் தரமான கம்பேக் ஆனது ‘பண்டிகையை கொண்டாடுங்களே’ என சிஎஸ்கே ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஐபிஎல்லில் 12 கோடிக்கு சிஎஸ்கே அணியால் துபே தக்கவைக்கப்பட்டுள்ளார்.