vaibhav - jaiswal cricinfo
T20

சூர்யவன்ஷி - ஜெய்ஸ்வால் செய்த வரலாற்று சம்பவம்.. 18 வருட IPL-ல் முதல் அணியாக RR சாதனை!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 35 பந்தில் சதமடித்த 14 வயது சூர்யவன்ஷி வரலாற்று சாதனை படைத்தார்.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடர் பல சாதனைகளை இதற்கு முன் கண்டுள்ளது, இதற்கு பிறகும் காணப்போகிறது. ஆனால் 14 வயதில் ஒரு சிறுவன் வந்து உலகத்தரம் வாய்ந்த பவுலர்களுக்கு எதிராக 35 பந்தில் சதமடிக்கும் நிகழ்வெல்லாம் மீண்டும் நடப்பதென்பது முறியடிக்கப்படாத ஒன்றாகவே இருக்கப்போகிறது.

இளம் வயதில் இச்சாதனையை படைத்த பீஹாரை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 71 பந்தில் 166 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டியிருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி

முதலில் விளையாடிய குஜராத் அணி 209 ரன்களை அடித்திருந்த நிலையில், இரண்டாவது பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி சூர்யவன்ஷி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அபாரமான ஆட்டத்தால் 15.5 ஓவரில் 212 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் 18 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் அணியாக வரலாற்று சாதனை படைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

வரலாற்று சாதனை படைத்த ராஜஸ்தான்!

நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் கையிலிருந்த 3 போட்டிகளை கடைசி ஓவரில், கடைசி பந்தில் நழுவவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 10 போட்டியில் வெறும் 3-ல் மட்டுமே வெற்றிபெற்று 8வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் 3 இதயம் உடைக்கும் தோல்விக்கு பிறகு குஜராத் அணிக்கு எதிராக தரமான கம்பேக் கொடுத்த ராஜஸ்தான், 200 ரன்களுக்கு மேலான டார்கெட்டை அதிவேகமாக சேஸ்செய்த அணியாக சாதனை படைத்துள்ளது.

18 வருட ஐபிஎல் வரலாற்றில் 15.5 ஓவரில் 212 ரன்களை அடித்த ராஜஸ்தான் அணி அதிவேகமாக 200+ டார்கெட்டை சேஸ்செய்த அணியாக முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

அதிவேகமாக 200+ டார்கெட் சேஸ் செய்த அணிகள்:

* 15.5 ஓவர்கள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் - 2025

* 16 ஓவர்கள் - ஆர்சிபி vs குஜராத் டைட்டன்ஸ் - அகமதாபாத் - 2024

* 16.3 ஓவர்கள் - மும்பை இந்தியன்ஸ் vs ஆர்சிபி - மும்பை - 2023

* 17.3 ஓவர்கள் - டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் லயன்ஸ் - டெல்லி - 2017

* 18 ஓவர்கள் - மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை - 2023