சாஹல், மஹ்வாஷ் எக்ஸ் தளம்
T20

”அது எனக்குப் புரியவில்லை” சாஹலுடன் டேட்டிங் வதந்தி?விளக்கமளித்த ஆர்.ஜே.மஹ்வாஷ்!

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் இணைத்துப் பேசப்பட்ட ஆர்.ஜே.மஹ்வாஷ் தனது டேட்டிங் குறித்த வதந்தி செய்திகள் குறித்து பதிலளித்துள்ளார்.

Prakash J

34 வயதான சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், தனது மனைவி தனஸ்ரீ வர்மாவிடமிருந்து விவாகரத்து பெற்றதால் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை கடந்துவருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின்போது பெண் ஒருவருடன் சாஹல் காணப்பட்ட செய்தி பேசுபொருளானது. விசாரணையில் அந்தப் பெண் பிரபல ஆர்.ஜே.மஹ்வாஷ் என தெரிய வந்துள்ளது. இருப்பினும், அவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்படுவது இது முதல்முறை அல்ல எனத் தெரிய வந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில், மஹ்வாஷ் சாஹலுடன் ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டார், இது இருவருக்கும் இடையே டேட்டிங் வதந்திகளைத் தூண்டியது. என்றாலும் இந்த டேட்டிங் வதந்திகளை மஹ்வாஷ் மறுத்திருந்தார். தவிர, இதுபோன்ற போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என வலியுறுத்தி இருந்தார். அதுபோல் சாஹலும் ’இதுபோன்ற செய்திகளில் ஈடுபட வேண்டாம்’ என்று ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

மஹ்வாஷ்

இந்த நிலையில், ஆர்.ஜே.மஹ்வாஷ் தனது டேட்டிங் குறித்த வதந்தி செய்திகள் குறித்து பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், "நான் மிகவும் தனிமையில் இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்ற கருத்து எனக்குப் புரியவில்லை. என்றாலும், நான் திருமணம் செய்யும்போது மட்டுமே டேட்டிங் செய்வேன். நான் சாதாரண டேட்டிங்கில் செல்வதில்லை. ஏனென்றால், நான் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஒருவரை மட்டுமே டேட்டிங் செய்வேன். ’தூம்’ படத்தில் வருவதுபோல, பைக்கின் பின்னால் தனது மனைவியையும் குழந்தைகளையும் பார்க்கும் நபர் நான். அதனால் நான் அதை நிறுத்திவிட்டேன்” எனப் பதிவிட்டிருக்கும் அவர், தனக்கு 19 வயதில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், ஆனால் 21 வயதை எட்டியபோது அதை ரத்து செய்ததாகவும் தெரிவித்துள்ளார். எனவே, எதிர்காலம் குறித்த நம்பிக்கை இல்லாத எதிலும் நான் அவசரப்படுவதில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.