பிரியா சரோஜ், ரிங்கு சிங் எக்ஸ் தளம்
T20

ரிங்கு சிங் திருமண நிச்சயதார்த்தம்.. ஆனந்தக் கண்ணீரில் பிரியா சரோஜ்!

பிரியா ஆனந்தக் கண்ணீர் வடித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Prakash J

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங், குஜராத் அணி வீரரும் அவருடைய நண்பருமான யாஸ் தயாள் பந்துவீச்சில் 5 சிக்ஸ் அடித்து தனது அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம், அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமுதல் அதிரடி ஆட்டத்தை விளையாடிய அவர், விரைவிலேயே இந்திய அணியிலும் இடம்பிடித்தார். இந்திய அணிக்காக 33 சர்வதேச டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போதைய நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், இந்தியாவின் இளம் எம்பியான சமாஜவாதி கட்சியின் பிரியா சரோஜை ரிங்கு சிங் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் வரும் இன்று நடைபெற்றது. லக்னோவில் நடைபெற்ற இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில், கிரிக்கெட் மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த சிலர் கலந்து கொண்டனர். பிரியாவும் ரிங்குவும் தங்கள் நிச்சயதார்த்த மோதிரங்களை அணிவித்துக் கொண்டனர். அப்போது. பிரியா ஆனந்தக் கண்ணீர் வடித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தற்போது அவர்களது திருமண நிச்சயதார்த்தம் முடிவு அடைந்ததைத் தொடர்ந்து வாரணாசியில் நவம்பர் மாதத்தில் அவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, ரிங்கு சிங் குடும்பத்தினர் அலிகரின் மஹுவா கெடாவில் உள்ள ரூ.3.5 கோடி மதிப்புள்ள பங்களாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த பங்களாவை ரிங்கு சிங் வாங்கியுள்ளார். இங்குதான் ரிங்கு சிங் - பிரியா சரோஜ் திருமணத்திற்குப் பிறகு வசிக்க உள்ளனர்.