யாஷ் தயாள் எக்ஸ் தளம்
T20

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாய்ந்த போக்சோ வழக்கு.. UP T20இல் விளையாடத் தடை!

பாலியல் வன்புணர்வு வழக்குப் பதிவுகளால் RCB வீரர் யாஷ் தயாளுக்கு உத்தரப்பிரதேச டி20 லீக்கில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Prakash J

ஐபிஎல்லின் 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றாக உள்ளது. இவ்வணியில் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளும் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில், அவர் மீது இரண்டு பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று, ஜெய்ப்பூரில் உள்ள சங்கனர் காவல் நிலையத்தில் POCSO சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, யாஷ் தயாள் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில், பாலியல் வன்புணர்வு வழக்குப் பதிவுகளால், அவருடைய கிரிக்கெட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

யாஷ் தயாள்

இந்த விவகாரம் தொடர்பாக யாஷ் தயாளுக்கு உத்தரப்பிரதேச டி20 லீக்கில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தைனிக் ஜாக்ரன் செய்தியின்படி, உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் (UPCA), தயாளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக அவர் லீக்கில் போட்டியிட தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் ரூ.7 லட்சத்திற்கு வாங்கப்பட்ட பின்னர், உத்தரப்பிரதேச டி20 லீக்கில் கோரக்பூர் லயன்ஸ் அணியில் தயாள் இடம்பெற்றிருந்தார். இருப்பினும், கோரக்பூர் லயன்ஸ் அணியின் உரிமையாளரான கவுர் சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஷேஷ் கவுர், UPCA அணிக்கு அத்தகைய தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.