PSG vs Chelsea AFP
T20

FIFA Club World Cup.. செல்சி அணி சாம்பியன்!

FIFA Club World Cup இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி ஃபிஃபா கிளப் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது.

Prakash J

கிரிக்கெட்டைப் போலவே கால்பந்து விளையாட்டிற்கும் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், FIFA கிளப் 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. 32 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி ஃபிஃபா கிளப் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது.

PSG vs Chelsea

ஃபிஃபா என்பது உலகெங்கிலும் உள்ள சில சிறந்த கிளப் அணிகளை ஒன்றிணைக்கும் ஒரு சர்வதேச கால்பந்து போட்டியாகும். இந்தப் போட்டி ஆரம்பத்தில் 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால் 2001 மற்றும் 2004க்கு இடையில் இடைநிறுத்தப்பட்டு 2005இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2024இல் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, போட்டி 2025இல் ஒரு புதிய வடிவத்துடன் 32 அணிகள் பங்கேற்கும் போட்டியாக விரிவடைந்தது. ஸ்பானிஷ் ஜாம்பவான்களான ரியல் மாட்ரிட் 2014, 2016, 2017, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை போட்டியை வென்றதன் மூலம் அதிக பட்டங்களுக்கான சாதனையைப் படைத்துள்ளது. பார்சிலோனா 2009, 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மூன்று பட்டங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.