pak vs sl x
T20

பாகிஸ்தானிடம் மரண அடி வாங்கிய இலங்கை.. 2-1 என தொடரை வென்ற PAK!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது இலங்கை அணி.

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி தொடக்க இரு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. 21 வயது பாகிஸ்தான் வீரர் மாஸ் சதாக்கத் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். மூன்றாவது போட்டியில் குசால் மெண்டீஸின் 87 ரன்கள் உதவியுடன் இலங்கை ஆறுதல் வெற்றியை பெற்றது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டி20 தொடர் நடைபெற்ற நிலையில், முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் 21 வயது பாகிஸ்தான் வீரர் மாஸ் சதாக்கத் 7 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த இளம் வீரர் இந்த டி20 தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட டேலண்ட்டாக பார்க்கப்படுகிறது.

2 டி20 போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 168 ரன்கள் மட்டுமே அடித்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை குசால் மெண்டீஸின் 87 ரன்கள் உதவியால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நீண்ட இடைவெளிக்கு பிறகு நவம்பர் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.