மஞ்ச்ரேக்கர், பும்ரா எக்ஸ் தளம்
T20

”பும்ராவுக்கு ஏன் கேப்டன்ஷிப் கொடுக்கல” - கடுமையாகச் சாடிய மஞ்ச்ரேக்கர்!

இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் பும்ரா நிராகரிக்கப்பட்டதாக தேர்வுக் குழு தெரிவித்திருந்தது. இதை, இந்திய அணியின் முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.

Prakash J

மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனினும், ஷுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. காரணம், அவருக்கு முன்பு நல்ல அனுபவம் வாய்ந்த பும்ராவுக்கு கேப்டன் ஷிப் கொடுத்திருக்கலாம் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அவருடைய உடற்தகுதியைக் காரணம் காட்டி அது நிராகரிக்கப்பட்டதாக தேர்வுக் குழு தெரிவித்திருந்தது. இதை, இந்திய அணியின் முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.

பும்ரா

இதுகுறித்து அவர், “கேப்டன்ஷிப் தேர்வு வேடிக்கையான ஒன்றாக அமைந்துள்ளது. என்னால், பும்ரா ஏன் கேப்டனாக கருதப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. முழுமையாக விளையாட மாட்டார் என்பதால் அவரை கேப்டனாக கருதவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். கடந்த காலங்களில் விராட் கோலி முழுமையாக விளையாடாத டெஸ்ட் தொடர்கள் இருந்தன. அதையும் தாண்டி, அவர்கள் கேப்டனாகச் செயல்பட்டனர். அப்படிப்பட்ட நிலையில் உங்களுடைய சிறந்த பவுலரான பும்ரா முதல் 2 போட்டிகளில் விளையாடினால்கூட அவரை நீங்கள் கேப்டனாக விளையாட வைக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று கூறினார்.