பிரக்ஞ்சானந்தா - கார்ல்சன் எக்ஸ் தளம்
T20

ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் | நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

லாஸ் வேகாஸில் நடைபெற்ற ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில், இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

Prakash J

ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டி அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வெகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் 19 வயதே ஆன இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வேவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காயுடன் விளையாடிய பிரக்ஞானந்தா வெறும் 39ஆவது நகர்த்தலில், 5 முறை உலக சாம்பியனான கார்ல்சனைத் தோற்கடித்தார்.

இதன்மூலம், கிளாசிக்கல், ரேபிட் மற்றும் பிலிட்ஸ் என மூன்று வடிவங்களிலும் கார்ல்சனை தோற்கடித்த வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். இதன்மூலம், காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். பாரிஸ் செஸ் போட்டியில் 9வது இடத்துடன் நிறைவு செய்து ஏமாற்றம் அளித்த பிரக்ஞானந்தாவுக்கு, இந்த வெற்றி புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றியின்மூலம் குரூப் ஒயிட் பிரிவில் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.