சீனிவாசன், ஃபிளிண்டாஃப், லலித் மோடி pt web
T20

“சென்னை அம்பயர் வைத்தால் இதான் பிரச்னை” - CSK மற்றும் சீனிவாசன் மீது லலித் மோடி சரமாரி குற்றச்சாட்டு

ஐபிஎல் முன்னாள் நிறுவனர் லலித் மோடி சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Angeshwar G

ஐபிஎல் ஏலம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள். ஏலத்தில் எடுத்த வீரர்களைக் கொண்டு எந்த அணி 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. தங்களது அணிக்காக ரசிகர்கள் இணையப்போரும் நடத்தி வருகின்றனர்.

லலித் மோடி, தாதா இப்ராஹிம்

இந்நிலையில்தான் ஐபிஎல் முன்னாள் நிறுவனர் லலித் மோடி கொடுத்த பேட்டி ஒன்று அரசியல் களம், ஐபிஎல் களம் என அனைத்திலும் புயலைக் கிளப்பியுள்ளது. கொலை மிரட்டல் காரணமாக மட்டுமே இந்தியாவை விட்டு வெளியேறியதாக அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார்.

ராஜ் ஷமானியுடனான பாட் காஸ்ட் நிகழ்வில் பேசிய லலித் மோடி, “நான் நாட்டை விட்டு வெளியேறியது சட்ட சிக்கல்கள் காரணமாக அல்ல. நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்ததால் மட்டுமே வெளியேறினேன். அவர் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய விரும்பிய நிலையில், நான் அதில் பங்கேற்க மறுத்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

சென்னை ஆட்டத்தில் சென்னை அம்பயர்

ஆண்ட்ரூ ஃப்ளிண்டாப்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சீனிவாசன், இங்கிலாந்து வீரரான ஆண்ட்ரூ ஃப்ளிண்டாப் சிஎஸ்கே அணிக்கு வேண்டும் என தெரிவித்ததாக லலித்மோடி தெரிவித்துள்ளார். அதன்படி, “நான் ஃபிளிண்டாஃபை சீனிவாசனிடம் கொடுத்தது ஒவ்வொரு அணிக்கும் தெரியும். இல்லையெனில் சீனிவாசன் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்க மாட்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு சென்னை அணி ரூ.7.5 கோடிக்கு இங்கிலாந்து ஆல்ரவுண்டரான ஆண்ட்ரூ பிளிண்டாப்பை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஃப்ளிண்டாபை ஏலத்தில் தேர்வு செய்ய வேண்டாம் என அனைத்து அணிகளிடம் தெரிவித்தோம் என கூறியுள்ள லலித் மோடி சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக சீனிவாசன் நடுவர்ளை அமைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். “சென்னை ஆட்டத்தில் சென்னை அம்பயரை வைக்கும்போது அது மறைமுக பிக்சிங் ஆகிறது. நான் இதைக் கூறியபோது அவர் எனக்கு எதிராக முற்றிலுமாக மாறினார்” எனத் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது மேலும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.