IPL 2025 Auction Facebook
T20

IPL 2025 Auction | முதல் நாள் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்ட டாப் 10 வீரர்கள் யார் யார்?

இதுவரை இல்லாத அளவிற்கு ரிஷப் பந்த் அதிக விலைக்கு ஏலம் போனார்.

PT WEB

IPL 2025 Auction | முதல் நாள் ஏலத்தின் மதிப்பு!

18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும் நிலையில், முதல் நாள் ஏலத்தில் 467 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு, 72 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்.

ஐபிஎல் முதல் நாள் ஏலம்: டாப் 10 வீரர்கள்

  1. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் லக்னோ அணி சார்பில் 27 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

  2. ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணி 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும்,

  3. வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

  4. அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹல் ஆகியோரை தலா 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

  5. இங்கிலாந்து வீரர் பட்லர் குஜராத் அணிக்காக 15 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

  6. கே.எல்.ராகுலை 14 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியும்,

  7. ட்ரென்ட் போல்ட்டை 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணியும்,

  8. அதே தொகைக்கு ஜோஃப்ரா ஆர்ச்சரை ராஜஸ்தான் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன.

  9. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பெங்களூரு அணியில் விளையாட 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை நூர் அகமது 10 கோடி ரூபாய்க்கும், அஸ்வின் 9 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும், கான்வே 6 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

கலீல் அகமது 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கும், ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய், ராகுல் திரிபாதி 3 கோடியே 40 லட்சம், விஜய் சங்கர் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். தமிழக வீரர் நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் அணி 10 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏலம் எடுத்துள்ளது.

ரிஷப் பந்த் அதிக விலைக்கு ஏலம்

இதுவரை இல்லாத அளவிற்கு ரிஷப் பந்த் அதிக விலைக்கு ஏலம் போனார். ஐபிஎல் ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பந்த்-ஐ லக்னா சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது. அடிப்படை விலையாக 2 கோடிக்கு அறிமுகப்படுத்த ரிஷப் பந்த் மீது பஞ்சாப், லக்னோ, ஹைதராபாத் ஆகிய அணிகள் போட்டி போட்டு ஏலத்தொகையை உயர்த்தின.

20 கோடியே 75 லட்சத்திற்கு ஆர்டிஎம் ஐ பயன்படுத்தி டெல்லி கேப்பிட்டல் அவரைத் தக்க வைக்க முயன்றது. அதையும் தாண்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 27 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டது. டெல்லி அணி அத்தனை கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்க முன் வராததால், லக்னோ அணிக்கு ரிஷப் பந்த் சென்றார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக கோடி ரூபாய்க்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையும் அவர் இதன் மூலம் பெற்றுள்ளார். முன்னதாக இதே ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், 26 கோடியே 75 லட்சத்திற்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.