சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் x
T20

இனி MI-க்கு வெற்றிப்பாதை தான்.. அணிக்கு திரும்பும் சூர்யகுமார் யாதவ்! வெளியான முக்கிய தகவல்!

Rishan Vengai

நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் ரசிகர்கள் அதிருப்தியுடன் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் சத்தமிட்டு வரும் நிலையில், அதற்கேற்றார் போல் விளையாடிய 3 போட்டியிலும் தோல்வியை பெற்று மும்பை அணி மோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது.

ஹர்திக் பாண்டியா

இந்நிலையில், மும்பை அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக, நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடற்தகுதியை நிரூபித்த சூர்யகுமார் யாதவ்!

கடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால், அடுத்தடுத்து இரண்டு அறுவைசிகிச்சைகளை செய்துகொண்ட சூர்யகுமார் யாதவ் 3 மாதங்களாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக உடற்தகுதி தேர்வில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவால் உடற்தகுதியை நிரூபிக்க இயலவில்லை. அதை எதிர்பார்க்காத சூர்யகுமார் யாதவ் ஹார்ட் பிரேக்கிங் எமோஜியை பதிவிட்டு ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருந்தார். டி20 உலகக்கோப்பையை எதிர்நோக்கி தொடர்ந்து சூர்யகுமார் யாதவின் உடற்தகுதியை கண்காணித்து வந்த NCA அதிகப்படியான கவனத்தை செலுத்தியது.

சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில், தொடர்ந்து கண்காணிப்பில் இருந்துவந்த சூர்யகுமார் யாதவ், தன்னுடைய உடற்தகுதியை நிரூபித்து விட்டதாகவும், எதிர்வரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

suryakumar yadav

இதுகுறித்து பேசியிருக்கும் பிசிசிஐ அதிகாரி ஒருவர், “ஐபிஎல்-க்கு முன் நடந்த முதல் ஃபிட்னஸ் டெஸ்ட்டில் அவர் 100% ஃபிட்டாக இருப்பதாக உணரவில்லை, அதனால் தான் தொடர்ந்து அவரை நாங்கள் கண்காணிப்பில் கொண்டுவந்தோம். ஆனால் சூர்யகுமார் தற்போது ஃபிட்டாக இருக்கிறார். NCA அவரை சில பயிற்சி ஆட்டங்களில் விளையாட வைத்தது. அந்தப்போட்டிகளில் அவர் ஃபிட்டாக இருந்தார், அதனால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இணையலாம். சூர்யா மீண்டும் MI-க்கு செல்லும்போது, ​​அவர் 100 சதவீதம் உடல்தகுதியுடனும், கேம்களை விளையாடத் தயாராக இருக்கவேண்டும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்பினோம்” என்று தெரிவித்துள்ளார்.